குடும்பத் தலைவிகளுக்கு மாதம் 1,000 ரூபாய் உரிமைத் தொகை வழங்கும் திட்டத்தை திமுக அரசு எப்போது தொடங்கப் போகிறது என தாய்மார்கள் ஆவலுடன் எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறார்கள். ஆனால், இப்போதுள்ள நிதிநிலையில் இன்னும் ஆறு மாதங்களுக்கு இந்தத் திட்டத்தைச் செயல்படுத்துவது சாத்தியமில்லை என அதிகாரிகள் சொல்கிறார்களாம். எனவே, தமிழக அரசின் நிதி நிலை குறித்து வெள்ளை அறிக்கையை வெளியிட்டு, அதைச் சொல்லி இந்தத் திட்டத்தை இன்னும் கொஞ்ச நாட்களுக்குத் தள்ளிப் போடலாமா என யோசிக்கிறதாம் ஆளும்கட்சி தலைமை.