மக்கள் நீதி மய்யம் கட்சியின் முன்னாள் துணைத் தலைவர் மருத்துவர் மகேந்திரன், கழகத்தில் இணைந்ததை ஆகப்பெரிய பலமாகப் பார்க்கிறதாம் திமுக தலைமை. “லேட்டா வந்தாலும் லேட்டஸ்டா வந்திருக்கும் மகேந்திரன் தேர்தலுக்கு முன்பே வந்திருந்தால், கொங்கு மண்டலத்தில் இன்னும் அதிகமாக நாம் வெற்றிபெற்றிருப்போம்” என்று ஸ்டாலின் புகழாரம் சூட்டியதுகூட, அதன் வெளிப்பாடு தான் என்கிறார்கள். கொங்கு மண்டலத்தைச் சேர்ந்த அண்ணாமலையை மாநில தலைவராக பாஜக அமரவைத்திருக்கும் நிலையில், கோவையில் திமுக தனது செல்வாக்கை நிலைநிறுத்த கோவை மேயர் வேட்பாளராக மகேந்திரனை களமிறக்கலாம் என்ற பேச்சு அறிவாலய வட்டாரத்தில் எதிரொலிக்கிறது.