கே.கே.மகேஷ்
magesh.kk@kamadenu.in
மு.க.ஸ்டாலின் தலைமையிலான திமுக ஆட்சியில் தொழில் துறை அமைச்சர், வணிகவரித் துறை அமைச்சர், தகவல் தொழில்நுட்பத் துறை அமைச்சர், உணவுத் துறை அமைச்சர் என்று முக்கியமான பதவிகள் எல்லாம் தென்மாவட்டத்தினருக்கே கிடைத்திருக்கிறது. நிதி அமைச்சர் பி.டி.ஆர்.பழனிவேல் தியாகராஜனும் மதுரைக்காரராகவே இருப்பதால், தமிழக பட்ஜெட்டை ஆவலுடன் எதிர்பார்க்கிறார்கள் தென்மாவட்டத்தினர்.
கவனம் திரும்புமா?
திமுக, எப்போதுமே சென்னைக்கு அதீத முக்கியத்துவம் கொடுக்கும் கட்சி என்ற பேச்சு உண்டு. அதிமுக அப்படியல்ல. எம்ஜிஆர், ஜெயலலிதா போன்றோர் சென்னைக்கு வெளியில் போட்டியிட்டு வென்றதுடன், வென்ற தொகுதிகளுக்கும் நிறைய திட்டங்களைக் கொண்டுவந்திருக்கிறார்கள். அதன் பலனை அந்தந்த மாவட்டங்களும் அடைந்தன என்றே சொல்லலாம். எடப்பாடி பழனிசாமி ஆட்சிக்காலத்தில், வெறும் நான்கே ஆண்டுகளில் கொங்கு மண்டலம் 20 ஆண்டுகளுக்குத் தேவையான வளர்ச்சியை அடைந்துவிட்டதாகவே சொல்கிறார்கள்.