அஞ்சலி: ரமேஷன் நாயர்- மலையாள மண்ணில் தமிழ் வளர்த்த கவி


என்.சுவாமிநாதன்
swaminathan.n@kamadenu.in

தீர்க்கமிகு எழுத்துகளால் மலையாளிகளின் மனதில் நீங்காத இடம் பிடித்தவர் ரமேஷன் நாயர். மலையாள படைப்புலகப் பங்களிப்புக்காக சாகித்ய அகாடமி விருதைப் பெற்ற அவர், தமிழ் மண்ணுக்கும் நெருக்கமானவர். சிலப்பதிகாரம் தொடங்கி பாரதியாரின் கவிதைகள் வரை தமிழின் பல்வேறு இலக்கியப் படைப்புகளை மலையாளத்துக்கு மொழிபெயர்த்த ரமேஷன், மறைந்த முதல்வர் கருணாநிதியின் மனம்கவர்ந்த படைப்பாளியும்கூட. கேரளத்தில் இருந்தாலும், தமிழுக்குத் தொண்டு செய்துவந்த ரமேஷனையும் கரோனா காவு கொண்டு போயிருப்பது பலரையும் வேதனையில் ஆழ்த்தியிருக்கிறது.

சாகித்ய அகாடமி

1948-ல், குமரி மாவட்டம் குமாரபுரம் கிராமத்தில் பிறந்தவர் ரமேஷன். அப்போது கன்னியாகுமரி மாவட்டம் கேரளத்தோடு இருந்தது. இதனால் இயல்பிலேயே தமிழும் மலையாளமும் அவருக்கு நன்கு பரிச்சயம். பொருளாதாரத்தில் இளங்கலைப் பட்டமும், மலையாள இலக்கியத்தில் முதுகலைப் பட்டமும் பெற்ற அவர், ஆரம்பகாலத்தில் அகில இந்திய வானொலியில் பணியாற்றினார். ஆனால், தீராத எழுத்தார்வம் அழைக்க, விருப்ப ஓய்வுகொடுத்துவிட்டு முழுநேர எழுத்தாளர் ஆனார். 2018-ல் நாராயணகுருவின் வாழ்க்கை காவியத்தைக் ‘குரு பெளர்ணமி’ எனும் நூலாக எழுதினார். அது அவருக்கு சாகித்ய அகாடமி விருதைப் பெற்றுத்தந்தது.

x