நான் ஜெய்ஹிந்துக்கு எதிரானவனா?- கொந்தளிக்கும் கொங்கு ஈஸ்வரன்


டி.கார்த்திக்
karthikeyan.di@hindutamil.co.in

திமுகவும் பாஜகவும் வார்த்தைகளால் மோதிக்கொள்வது வழக்கமான நிகழ்வுதான். ஆனால், திடீரென திமுக கூட்டணியில் உள்ள கொங்குநாடு மக்கள் தேசியக் கட்சியின் பொதுச்செயலாளர் ஈஸ்வரனுக்கும் பாஜகவினருக்கும் வார்த்தை மோதல் முற்றியிருக்கிறது. அதற்கு வித்திட்டது சட்டப்பேரவையில் ஈஸ்வரன் ‘ஜெய்ஹிந்த்’ பற்றி பேசிய வார்த்தைகள்தான். பாஜகவினரும் ஈஸ்வரனும் காரசாரமாகக் கருத்துகளைப் பரிமாறிக் கொண்டிருக்கும் நிலையில், காமதேனுவுக்காக ஈஸ்வரன் அளித்த பேட்டி.

‘ஜெய்ஹிந்த்’ முழக்கம் தொடர்பாக நீங்கள் பேசிய விஷயம் பரபரப்பைக் கிளப்பிவிட்டிருக்கிறதே?

இதை நான் எதிர்பார்க்கவில்லை. “சென்ற ஆண்டு ஆளுநர் உரையின் கடைசியிலே ‘நன்றி வணக்கம், ஜெய்ஹிந்த்’ என்று போட்டிருந்தது. இந்த ஆளுநர் உரையிலே அந்த ‘ஜெய்ஹிந்த்’ இல்லை என்பதைப் பதிவு செய்ய விரும்புகிறேன்” என்றே பேசினேன். திடீரென திட்டமிட்டு மூன்றாவது நாள் சர்ச்சையாகிறது. நான் என்ன பேசினேன், எந்தத் தொனியில் பேசினேன் என்பது சட்டப்பேரவைக்குள் இருந்தவர்களுக்குத் தெரியும்.

x