நாக் - அவுட் நாராயணசாமி!


புதுச்சேரியில் காங்கிரஸ் தோற்ற தால் முன்னாள் முதல்வர் நாராயணசாமியின் அதிகாரங்களை குறைக்கும் முடிவுக்கு வந்திருக்கிறதாம் காங்கிரஸ் தலைமை. இதன்படிகடந்த வாரம் டெல்லிக்கு அழைக்கப்பட்ட நாராயண சாமிக்கு எதிராக பலமான குற்றச் சாட்டுகளை எடுத்துப்போட்டு விலாசித் தள்ளினார்களாம். இதையடுத்து, அவரால் மாநில தலைவர் பதவிக்கு சிபாரிசு செய்து கொண்டு வரப்பட்ட ஏ.வி.சுப்பிரமணியத்தை நீக்கி  விட்டு முன்னாள் காங்கிரஸ் கொறடா அனந்தராமன் மாநிலத் தலைவராக்கப்படலாம் என்கிறார்கள். புதுவை காங்கிரஸின் பெரும்பாலான நிர்வாகிகள் அனந்தராமனுக்கு ஆதரவாக
டெல்லிக்கு கடிதம் அனுப்பி இருக்கிறார்களாம்.

x