வேண்டாம் அந்தப் பதவி - சென்னிதலா


கேரள காங்கிரஸில் கோஷ்டி அரசியலை சமாளிக்க, ரமேஷ் சென்னிதலாவையும் உம்மன் சாண்டியையும் கொஞ்சம் ஓரங்கட்டி
வைத்திருக்கிறது காங்கிரஸ் தலைமை. அதனால் தான் மாநிலத் தலைவர், சட்டப்பேரவை எதிர்க்கட்சி தலைவர் பதவி
களுக்கு இவர்கள் இருவரையும் தவிர்த்து விட்டு புதியவர்களை நியமித்திருக்கிறார்கள். தன்னை ஓரங்கட்டியதில் காங்கிரஸ் கட்சியின் தலைமை நிலைய பொதுச்செயலாளர் கே.சி.வேணுகோபாலுக்கு பங்கு இருப்பதாக சந்தேகிக்கிறாராம் சென்னிதலா. இந்த நிலையில் சென்னிதலாவுக்கு பொதுச்செய லாளர் பதவி தருவதாகச் சொல்லி டெல்லிக்கு அழைத்தார்களாம். ஆனால், அதை ஏற்றுக்கொண்டால், தன்னைவிட ஜூனியரான வேணுகோபாலிடம் போய் கைகட்டி நிற்க வேண்டும் என்பதால், அந்தப் பதவியை ஏற்க மறுத்துவிட்டாராம் சென்னிதலா.
 

x