மாநிலங்களவைக்கு மருத்துவர் கனிமொழி?


தமிழகத்தில் காலியாக உள்ள மூன்று ராஜ்யசபா உறுப்பினர் பதவிகளுக்கு ஒரே சமயத்தில் நோட்டிஃபிகேஷன் வெளியானால், இரண்டு இடங்களை திமுக கூட்டணியும் ஒரு இடத்தை அதிமுகவும் கைப்பற்றும் வாய்ப்பு இருக்கிறது. தனித்தனியே வெளியானால் மூன்றையுமே திமுகவே கைப்பற்றும். தங்களுக்குக் கிடைக்கும் இடங்களில் ஒன்றை காங்கிரஸுக்காக திமுக விட்டுக் கொடுக்கலாம் என்கிறார்கள். அப்படி ஒரு இடம் கிடைத்தால், தமிழகத்திலிருந்து குலாம் நபி ஆசாத்தை மாநிலங்களவைக்கு அனுப்ப காங்கிரஸ் தரப்பில் ஆலோசிக்கப்படுகிறதாம். அதேசமயம், “திமுக தரப்பிலிருந்து பெண்மணி ஒருவர் மாநிலங்களவைக்கு அனுப்பப்படலாம், அவர், மறைந்த என்.வி.என்.சோமுவின் மகள் மருத்துவர் கனிமொழியாகவும் இருக்கலாம்” என்கிறார்கள் திமுக வட்டாரத்தில்.

x