பம்மல் நோட்டீஸும் பலே பின்னணியும்!


“அரசியலில் சில நேரங்களில் உணர்ச்சி மிகுதியால் சில தடித்த வார்த்தைகளைப் பயன்படுத்திவிட்டேன். அதற்காக வருந்தி இப்போது அரசியலில் நான் பக்குவமாகச் செயல்பட்டு வருகிறேன்”... எந்த நேரத்திலும் வழக்குகளில் சிக்கலாம் என சமூக வலைதளங்களில் செய்திகள் பறக்கும் நிலையில், முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி இப்படி பம்மியிருக்கிறார். திமுகவைப் பற்றியும் அதன் தலைவர் ஸ்டாலின் பற்றியும் முன்பு பட்டாசுத்தனமான வார்த்தைகளை படபடத்தவர் ராஜேந்திர பாலாஜி. அப்படிப்பட்டவரை, இந்த ஆட்சியில் சும்மா விடமாட்டார்கள் என்று அனைவரும் நினைத்துக் கொண்டிருக்கிறார்கள். ஆனால், அவரைச் சேதாரமின்றி காப்பாற்ற திமுக அமைச்சர் ஒருவரே மெனக்கிடுகிறாராம். ‘நீ பவர்ல இருந்தா என்னைய பாத்துக்கோ... நான் பவர்ல இருந்தா உன்னையக் கவனிச்சுக்கிறேன்’ என்ற ரீதியில், இருவருக்குள்ளும் ஏற்கெனவே எழுதப்படாத ஒப்பந்தமாம். அதன்படி, அமைச்சர் கொடுத்த யோசனைப்படியே பதமான பம்மல் நோட்டீஸைக் கொடுத்தாராம் முன்னாள் பால்வளம். ஆக, பாலாஜி மீது ஊழல் வழக்கு அது இது என்று வந்தாலுமே பெயரளவுக்குத்தான் இருக்கும் என்கிறார்கள் விருதுநகர் விவகாரம் அறிந்தவர்கள்.

x