யுஸ்ரா மார்டினி: ஒலிம்பிக் சென்ற அகதியின் கதை!


எஸ்.சுஜாதா
sujatha.s@hindutamil.co.in

கடந்த ஆண்டு டோக்கியோவில் நடைபெற வேண்டிய ஒலிம்பிக் போட்டி,பெருந்தொற்று காரணமாக ஒத்திவைக்கப்பட்டு, இந்த ஜூலை மாதம் நிகழவிருக்கிறது. இதில் பங்கேற்பதற்கு ‘அகதிகள் அணி’அறிவிக்கப்பட்டிருக்கிறது. ஐ.நா-வின்முயற்சியால், 2016-ல் ரியோ டி ஜெனிரோவில் நடந்த ஒலிம்பிக் போட்டிகளில் முதன்முறையாக ‘அகதிகள் அணி’ பங்கேற்றது. சிரியா, தெற்கு சூடான், ஆப்கானிஸ்தான், ஈரான் உள்ளிட்ட நாடுகளைச் சேர்ந்த அகதிகள் அதில் அங்கம் வகித்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

இதன் தொடர்ச்சியாக, டோக்கியோ ஒலிம்பிக்கிலும் அகதிகள் அணி பங்கேற்கிறது. இந்த அணியின் சார்பில் வெவ்வேறு போட்டிகளில் 29 விளையாட்டு வீரர்கள் கலந்துகொள்கிறார்கள். இதில் இடம்பெற்றுள்ள நீச்சல் வீராங்கனை யுஸ்ரா மார்டினியின் பக்கம் உலகத்தின் பார்வை திரும்பியிருக்கிறது. கடந்த ஐந்து ஆண்டுகளில் விளையாட்டு வீராங்கனையாகவும் எழுத்தாளராகவும் ஐ.நா அமைப்பின் அகதிகள் தூதராகவும் சிறப்பாகச் செயல்பட்டுவருகிறார் யுஸ்ரா.

யார் இந்த யுஸ்ரா?

x