மருத்துவ அலட்சியங்களைப் பேசும் அழியா வடு!- விருதுகளை குவித்த விழிப்புணர்வு குறும்படம்


என்.சுவாமிநாதன்
swaminathan.n@kamadenu.in

தன் சின்னஞ்சிறு மகளை பைக்கில் இருத்திக்கொண்டு அவளோடு உரையாடிக் கொண்டே செல்கிறார் நடுத்தர வயது தந்தை. “உனது லட்சியம் என்ன?” என மகளிடம் தந்தை ஆர்வத்துடன் பேசிக்கொண்டிருக்கும் சமயத்தில், போதை ஊசி செலுத்திக்கொண்டு உற்சாக மிகுதியில் காரில் வந்த கும்பல் ஒன்று அவர்கள் மீது மோதிவிடுகிறது. மகளின் கண்முன்னே தந்தை துள்ளத்துடிக்க இறந்துவிடுகிறார். ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் சேர்க்கப்படுகிறாள் சிறுமி. சிகிச்சைக்குப் பின்னர் வீடு திரும்பும் சிறுமிக்கு அடிக்கடி உடல்நலம் பாதிக்கப்படுகிறது. பேச்சுத்திறன் நாளுக்கு நாள் குறைந்துவிடுகிறது.

மருத்துவமனையில் சிகிச்சையில் இருந்தபோது சிறுமியிடம் காட்டப்பட்ட அலட்சியம்தான் இந்த நிலைக்கு அவளைத் தள்ளுகிறது. இத்தனை சோகத்துக்கும் இடையில் தனது அசாத்திய ஓவியத் திறமையால் தனக்கு நேர்ந்த அவலம், அதன் பின்னால் இருக்கும் மருத்துவ அலட்சியம் என அனைத்தையும் ஓவியத்தில் துல்லியமாக வெளிப்படுத்துகிறாள் சிறுமி. இதை வலி நிறைந்த பார்வையுடன் பதிவுசெய்கிறது சிவபிரசாத் இயக்கத்தில் வெளியாகியிருக்கும் ‘ஆறா வடு’ குறும்படம்!

நீதி கேட்கும் படைப்பு

x