எழுவர் விடுதலையை எதிர்ப்பேன்!- ராஜீவ் கொலையில் உயிர்தப்பிய காவல் அதிகாரி அனுசுயா ஆவேசம்


ம.சுசித்ரா
susithra.m@hindutamil.co.in

ராஜீவ் காந்தி கொலை வழக்கில் 30 ஆண்டுகளாகச் சிறைத்தண்டனை அனுபவித்துவரும் பேரறிவாளன் உட்பட எழுவர் விடுதலை செய்யப்பட வேண்டும் என்று குரல்கள் வலுத்துவரும் நிலையில், அவர்களை விடுவிக்கக்கூடாது என்று ஆளுநருக்குக் கடிதம் கொடுத்திருக்கிறார் ஓய்வுபெற்ற காவல் அதிகாரி அனுசுயா டெய்சி எர்னஸ்ட்.

1991-ல் ராஜீவ் காந்தி ஸ்ரீபெரும்புதூர் வந்திருந்தபோது பாதுகாப்புப் பணியில் ஈடுபட்ட காவல் துறையின் சார்பு ஆய்வாளரான அனுசுயா, அப்போது நடந்த குண்டுவெடிப்பில் படுகாயமடைந்து உயிர் தப்பினார். பின்னர், கூடுதல் காவல் கண்காணிப்பாளராகப் பதவி உயர்வு பெற்று 2018-ல் ஓய்வுபெற்ற இவர் தான், எழுவர் விடுதலைக்கு எதிராக தமிழக ஆளுநரைச் சந்தித்து மனு கொடுத்திருக்கிறார்.  “எழுவரில் ஒருவரையும் விடுவிக்கக் கூடாது” என்று ஆவேசமாக வாதாடும் அனுசுயாவுடன் அலைபேசி வழி உரையாடியதிலிருந்து…

ராஜீவ் காந்தி படுகொலைச் சம்பவத்தில் பாதிக்கப்பட்டவர் என்பதால்தான் எழுவர் விடுதலையை நீங்கள் எதிர்க்கிறீர்களா?

x