கார்த்தி விசுவாசிகளுக்கு நோட்டீஸ்!


சட்டப்பேரவைத் தேர்தலில் காங்கிரஸ் கூடுதலான இடங்களைப் பிடிக்கக் காரணம்  மாநில தலைவர் கே.எஸ்.அழகிரி தான் என்ற ரீதியில், தனது ட்விட்டர் பக்கத்தில் கருத்துப் பதிவிட்டிருந்த காங்கிரஸ் மாநிலதுணைத் தலைவர் கோபண்ணா, காமராஜரையும் அழகிரியையும் ஒப்பிட்டும் சில கருத்துகளை பதிவிட்டிருந்தார். இதை ஆட்சேபித்து கார்த்தி சிதம்பரம் விசுவாசிகள் உள்ளிட்ட பலர் கருத்துகளை பதிவிட்டார்கள். அவர்களில் சிலர் கோபண்ணாவை தரக்குறைவாகவும் விமர்சித்தார்கள். இப்படிகோபண்ணாவை  விமர்சனம் செய்தவர் களுக்கு எல்லாம் நோட்டீஸ் அனுப்பி இருக்கும் கட்சியின் ஒழுங்கு நடவடிக்கைக் குழு தலைவர் கே.ஆர்.ராமசாமி, ஜூலை 6-ம் தேதி அவர்களை விசாரணைக்கு ஆஜராகச் சொல்லி இருக்கிறார். தேர்தலில் உள்ளடி வேலை பார்த்தவர்களுக்கும் இந்த நோட்டீஸ் போயிருக் கிறதாம். ஆனால், விசாரணைக்கு அழைக்கப்பட்டிருப்போரில் சிலர், “ஜூலை 6 வரைக்கும் அழகிரியே தலைவர் பதவியில் நீடிப்பாரான்னு பாருங்க. அப்புறமா விசாரணைக் கமிஷன் வைக்கலாம்” என்று தெனாவெட்டாகப் பேசுகிறார்களாம்.

x