50 பேரை மட்டுமே வைத்து அடுத்த ஊருக்குத் தெரியாமல் திருமணத்தை நடத்துவது சாத்தியப்படாது என்று சொல்லி, தனது மகள் திருமணத்தை ஆவணி மாதத்துக்கு தள்ளி வைத்திருக்கிறார் டிடிவி தினகரன். ஆனால், அமைச்சர் மனோ தங்கராஜ், மொத்தமே 18 பேரை மட்டுமே அழைத்து தனது மகன் திருமணத்தை ஆர்ப்பாட்டமில்லாமல் அமைதியாக நடத்தி இருக்கிறார். திருமணத்துக்கு இரு தரப்பு நெருங்கிய உறவுகளை மட்டுமே அழைத்திருந்த மனோ தங்கராஜ், தனது முகாம் அலுவலகத்தில் பணியில் இருப்பவர்களைக்கூட அழைக்கவில்லையாம். அப்படி அழைக்க முடியாத உறவுகளுக்கும் நட்புகளுக்கும் திருமண தகவலை வாட்ஸ் - அப் வழியே அனுப்பி வைத்தவர், “கரோனா காலம் என்பதால் வாட்ஸ் - அப் வழியாகவே வாழ்த்துங்கள் போதும்” என்று சொல்லிவிட்டாராம்.