அண்ணா... வணக்கங்ணா..!


புதுச்சேரி முதல்வராக நாராயணசாமி இருந்தபோது துணை நிலை ஆளுநர் கிரண் பேடிக்கும் அவருக்கும் மோதல் நடக்காத நாட்கள் மிகமிகக் குறைவு. ஆனால், இப்போது நிலைமை தலைகீழ். முதல்வர் ரங்கசாமியும் துணை நிலை ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜனும் ஒருவருக்கொருவர் பாசமழை பொழிகிறார்கள். ஆளுநர் மாளிகையான ராஜ்நிவாஸுக்குள் ரங்கசாமி அடியெடுத்து வைத்தாலே “அண்ணா... வணக்கம்” என்று எழுந்து நின்று அழைக்கிறாராம் தமிழிசை. வெளி இடங்களிலும் இந்தப் பாசமழையை பார்க்க முடிகிறது. பாஜகவுடன் ரங்கசாமிக்கு சில கசப்பான அனுபவங்கள் இருந்தாலும் தமிழிசை மீது தனிப்பட்ட மரியாதை வைத்திருக்கிறாராம்.

x