வழிநடத்த வருகிறார் வையாபுரி


“சட்டமன்றத் தேர்தலுக்குப் பிறகு முக்கிய முடிவெடுப்பேன்” என்று வைகோ சொல்லி இருந்தார். அதற்கான சாயல்கள் தெரியத் தொடங்கி இருக்கின்றன. சமூக சேவை, கட்சியினர் இல்ல நிகழ்ச்சிகளில் மட்டும் பங்கேற்றுவந்த வைகோவின் மகன் துரை வையாபுரி, இப்போது கட்சி நிகழ்ச்சி களிலும் தலைகாட்டத் தொடங்கியிருக்கிறார்.

முதன் முறையாக தொலைக்காட்சி ஒன்றுக்குப் பிரத்யேகப் பேட்டியளித்த துரை வையாபுரி, “எளிதில் உணர்ச்சி வசப்பட்டுவிடும் அப்பாவின் குணம் அரசியல் தலைமைக்கு ஏற்றதல்ல” என்று மறுக்காமல் ஒத்துக் கொண்டதுடன், தனக்கும் அரசியலுக்கு வர ஆர்வம் இருப்பதாகவும் வெளிப்படையாகச் சொன்னார். ஆக, மதிமுகவை வழிநடத்தும் பொறுப்பை கூடிய சீக்கிரமே வைகோ தனது மகனிடம் ஒப்படைக்கலாம்.

x