தேர்தல் நிதியில் பங்களா கட்டுகிறாரா?- எச்.ராஜாவுக்கு எதிராக புகார் வாசிக்கும் சிவகங்கை பாஜக!


கே.கே.மகேஷ்
magesh.kk@kamadenu.in

காங்கிரஸ், கம்யூனிஸ்ட், திமுக என எதிர்க்கட்சிகள் மீது எதற்கும் அஞ்சாமல் ஏவுகணைகளை விடும் எச்.ராஜா, தற்போது சொந்தக் கட்சியினரின் தாக்குதலை சமாளிக்க முடியாமல் தவித்துக் கொண்டிருக்கிறார்.

தேர்தல் செலவுக்காக கட்சி கொடுத்த நிதியை முறையாகச் செலவிடாமல் இருந்துவிட்டு, தனது தோல்விக்கு எங்கள் மீது பழிபோடுகிறார் எச்.ராஜா என்று சொல்லி, சிவகங்கை மாவட்ட பாஜக தலைவர், 4 ஒன்றிய தலைவர்கள் உள்ளிட்ட பாஜக முக்கிய நிர்வாகிகள் 200 பேர் பதவி விலகியிருக்கிறார்கள். நூற்றுக்கும் மேற்பட்ட ஊர்களில் கட்சியின் கிளைகள் கூண்டோடு கலைக்கப்பட்டிருக்கின்றன.

தோல்விக்கு யார் காரணம்?

x