பாதாளத்தில் விழுந்த பங்கு மதிப்பு!-அதிர்ச்சியில் உறைந்த அதானி


சந்தனார்
readers@kamadenu.in

கடந்த வாரம் இந்தியப் பங்குச் சந்தை முதலீட்டாளர்களின் மத்தியில் பரபரப்பாகப் பேசப்பட்டது, அதானி குழும நிறுவனங்களின் பங்குகளில் ஏற்பட்ட அதலபாதாளச் சரிவுதான்.

அதானி குழுமத்தின் பங்கு மதிப்பு ஜூன் 14 (திங்கள் கிழமை) தொடங்கி ஜூன் 17 வரை தொடர் சரிவைச் சந்தித்தது. குறிப்பாக, அதானி டோட்டல் கேஸ் லிமிட்டட், அதானி பவர் லிமிட்டட், அதானி ட்ரான்ஸ்மிஷன் லிமிட்டட் ஆகிய நிறுவனங்களின் பங்கு மதிப்பு ஏறத்தாழ தலா 5 சதவீத சரிவைச் சந்தித்தது. அதானி போர்ட்ஸ் அண்ட் ஸ்பெஷல் எகனாமிக் ஸோன் நிறுவனம் 7.17 சதவீத சரிவையும், அதானி என்டர்பிரைசஸ் 5.77 சதவீத சரிவையும், அதானி க்ரீன் எனர்ஜி 3.10 சதவீத சரிவையும் சந்தித்தன. வியாழன் வரை ஏறத்தாழ இதே நிலவரம்தான்!

இதன் விளைவாக, இந்த நான்கு நாட்களில் மட்டும் மொத்தம் 13 பில்லியன் டாலரை அதானி இழந்திருப்பதாகச் செய்திகள் வெளியாகியிருக்கின்றன. உலகில் இப்படி யாரும் குறுகிய நாட்களில் இவ்வளவு பெரிய தொகையை இழந்ததில்லை. கடந்த சில காலமாகவே, அதானி குழுமத்தின் பங்குகள் கிடுகிடுவென வளர்ந்தது பலரையும் ஆச்சரியப்பட வைத்தது. கிட்டத்தட்ட 80 பில்லியன் டாலராக அதானியின் சொத்து மதிப்பு உயர்ந்தது. கடந்த மாதம், ஆசியாவின் இரண்டாவது பணக்காரர் எனும் பெருமையும் அதானிக்குக் கிடைத்தது. இப்படியான சூழலில்தான், கடந்த வாரம் நிகழ்ந்த கடும் சரிவு, அதானியை அதலபாதாளத்துக்குத் தள்ளிவிட்டது.

x