என்.சுவாமிநாதன்
swaminathan.n@kamadenu.in
நற்செயல்களும் நற்சொற்களும் ஒருவரின் வாழ்க்கையையே மாற்றிவிடும் என்பார்கள். தனது நற்செயலால், ‘மனதின் குரல்’ நிகழ்ச்சியில் பிரதமர் மோடியால் பாராட்டப்பட்ட கேரள மாற்றுத்திறனாளிக்கு, தைவான் சார்பில் 7 லட்ச ரூபாய் பரிசுத்தொகை அறிவிக்கப்பட்டிருப்பது நெகிழ்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது!
‘மனதின் குரல்’ வானொலி நிகழ்ச்சியின் மூலம் பிரதமர் மோடி அவ்வப்போது மக்களுடன் உரையாடிவருகிறார். எவ்வித எதிர்பார்ப்பும் இல்லாமல் மக்களுக்குச் சேவைசெய்யும் நல்ல உள்ளங்களையும் அந்த உரையில் அடையாளப்படுத்துகிறார். அப்படித்தான், ஏரிகளைச் சுத்தம் செய்யும் மாற்றுத்திறனாளி ராஜப்பனைப் பற்றியும் சில மாதங்களுக்கு முன்பு பேசினார். ராஜப்பன், கேரளத்தின் கோட்டயம் மாவட்டத்தில் உள்ள மஞ்சனிகாரம் பகுதியைச் சேர்ந்தவர். தற்போது 70 வயது ஆகும் ராஜப்பன், தவழ்ந்துசெல்லும் மாற்றுத்திறனாளி. திருமணம் செய்துகொள்ளாத இவர் தன் சகோதரி வீட்டில் வசிக்கிறார். தவழ்ந்து சென்று படகில் ஏறி, தானே துடுப்பால் படகை ஓட்டி குமரகம் ஏரிகளில் தேங்கிக்கிடக்கும் பிளாஸ்டிக் கழிவுகளைக் கடந்த ஆறு ஆண்டுகளாக அகற்றிவருகிறார்.
பாராட்டும் பரிசும்