மத்திய அரசுடன் இணக்கமாகச் செல்கிறதா திமுக?- இரா.முத்தரசன் பேட்டி


கே.கே.மகேஷ்
magesh.kk@kamadenu.in

எதிர்க்கட்சிகள் எல்லாம் 100 நாட்கள் போகட்டும் புதிய அரசை விமர்சிக்கலாம் என்று காத்திருக்கின்றன. திமுக கூட்டணிக் கட்சிகளோ மவுனமாக எல்லாவற்றையும் பார்த்துக் கொண்டிருக்கின்றன. இந்தச் சூழலில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் இரா.முத்தரசனுடன் ‘காமதேனு' மின்னிதழுக்காக போனில் உரையாடினோம்.

திமுகவின் 40 நாள் ஆட்சி எப்படியிருக்கிறது?

ஆட்சிப் பொறுப்பேற்றதுமே இரு பெரும் பிரச்சினைகளை எதிர்கொள்ள வேண்டிய நிர்பந்தம் இருந்தது. ஒன்று கரோனா இரண்டாம் அலை. இன்னொன்று மிகக்கடுமையான நிதி நெருக்கடி. இவ்வளவு நெருக்கடியிலும் மருத்துவமனை படுக்கைகளில் இருந்து ஆக்ஸிஜன் பற்றாக்குறை வரையில் எல்லாவற்றையும் சமாளித்து, படிப்படியாக கரோனா தொற்றையும் குறைத்து, தேர்தல் வாக்குறுதிகளையும் நிறைவேற்றத் தொடங்கியிருக்கிற வரையில், உண்மையிலேயே இது பாராட்டிற்குரிய ஆட்சி.

x