எஸ்.எஸ்.லெனின்
readers@kamadenu.in
“லாயத்தில் நிறைந்திருக்கும் விலைபோகாத கிழட்டுக் குதிரைகளை என்ன செய்வது?” - இந்த ஒற்றைக் கேள்வியின் பின்னணியில் தொடங்கப்பட்ட ஒரு தடுப்பூசி நிறுவனம், அதன் உரிமையாளர்களுக்குக் கோடிகளை கூரையைப் பிய்த்துக் கொட்டுகிறது.
பூனா நகரில் அமைந்திருக்கும் ‘சீரம் இன்ஸ்டிடியூட் ஆஃப் இந்தியா’ நிறுவனம் ‘டோஸ்’களின் எண்ணிக்கையில் உலகிலேயே அதிகத் தடுப்பூசிகளை உற்பத்தி செய்கிறது. அதன் தடுப்பூசிகளில் ஒன்றான ‘கோவிஷீல்ட்’, கரோனாவுக்கு எதிரான போரில் பல்வேறு நாடுகளின் கணக்கற்ற உயிர்களைக் காப்பாற்றி வருகிறது. அதேசமயம், “இந்தியாவில் எங்கள் உயிருக்குப் பாதுகாப்பில்லை” என்று சீரம் நிறுவன உரிமையாளர்கள் லண்டனுக்குப் பயந்து ஓடவும், அதே கோவிஷீல்ட் காரணமாகி இருக்கிறது.
பூனாவாலாவும் குதிரை லாயமும்