டிஜிட்டல் டீ கடை!


கரோனா தொற்றுக்குப் பிறகு எல்லோரும் செல்போனும் கம்ப்யூட்டருமே கதி என்ற நிலைக்கு வந்துவிட்டோம். சந்திப்பு, வாழ்த்து, மாநாடு, பட்டிமன்றம், விவாதம், சண்டை, விளக்கம், எதிர்வினை என அனைத்தையும் ஆன்லைனிலேயே நடத்த ஆரம்பித்துவிட்டோம். இதற்காக பல நிறுவனங்கள் பல்வேறு மென்பொருள் வசதிகளை உருவாக்கி வழங்கிவருகின்றன. அந்த வகையில் சமீபத்தில் வந்திருக்கும் ‘கிளப் ஹவுஸ்’ தான் இப்போது நெட்டிசன்கள் மத்தியில் ஹாட் டாப்பிக்காக இருக்கிறது. எதை வேண்டுமானாலும் பேசலாம், யார் வேண்டுமானாலும் கலந்துகொள்ளலாம் என்ற வகையில் இருக்கும் இந்த செயலி வந்த ஒரு வாரத்திலேயே அனைவருக்கும் பரிட்சயமாகிவிட்டது. என்ன, இதில் பஞ்சாயத்துகள் அதிகமாக நடப்பதாகவும் கூறுகிறார்கள். தலைப்பு ஒன்று தயார் செய்துவிட்டால் போதும் கிளப் ஹவுஸில் இலவசமாக மாநாடே நடத்தலாம். யாரையும் அழைக்கக்கூட வேண்டாமாம். சுவாரஸ்யமான தலைப்பு என்றால் கூட்டம் அள்ளிவிடுமாம். ஆனால், எல்லா கூட்டங்களையும் எட்டிப் பார்த்துவிட்டு கொஞ்ச நேரத்திலேயே ஓடிவந்துவிடுபவர்கள்தான் அதில் அதிகம் என்கிறார்கள். இப்போதைக்கு இதில் ஆடியோ வசதி மட்டும்தான் உள்ளது. வீடியோவும் வந்துவிட்டால் கிளப் ஹவுஸ் கனவான்களை கையில் பிடிக்க முடியாது! 

******************

டாஸ்மாக்கை மூட வேண்டும்.- எச்.ராஜா

சரி வாங்க... கர்நாடகாவுலயும் பாண்டிச்சேரிலயும் மொதல்ல மூடிட்டு வரலாம்!- மித்ரன்

x