மராத்தா இடஒதுக்கீடு: மகாராஷ்டிரத்தை உலுக்கும் அரசியல் புயல்


வெ.சந்திரமோகன்
chandramohan.v@hindutamil.co.in

இடஒதுக்கீடு தொடர்பான விவாதங்கள் இந்தியாவின் ஏதாவது ஒரு மூலையில் எப்போதும் ஒலித்துக்கொண்டே இருக்கின்றன. குஜராத்தில் படேல் சமூகத்தினர், ஹரியாணாவில் ஜாட் சமூகத்தினர், ஆந்திரத்தில் காபு சமூகத்தினர் என பல்வேறு மாநிலங்களைச் சேர்ந்த சமூகத்தினர் இடஒதுக்கீடு கோரி அரசின் கதவுகளைத் தட்டிக்கொண்டிருக்கிறார்கள். நீதிமன்றப் படிகளில் காத்திருக்கிறார்கள். இடஒதுக்கீடு விஷயத்தில் இந்திரா சஹானி வழக்கின் தீர்ப்பை முன்வைத்து இறுக்கம் தளராமல் இருக்கும் உச்ச நீதிமன்றம், இதுபோன்ற கோரிக்கைகளைப் புறந்தள்ளிக்கொண்டே இருக்கிறது. அந்த வகையில், மகாராஷ்டிரத்தின் மராத்தா சமூகத்தினருக்கு உத்தவ் தாக்கரே அரசு வழங்கிய இடஒதுக்கீட்டை ரத்துசெய்து அண்மையில் உச்ச நீதிமன்றம் அளித்த தீர்ப்பு, அம்மாநில அரசியலில் சலசலப்பை ஏற்படுத்தியிருக்கிறது.

உச்ச நீதிமன்றத் தீர்ப்பால் செய்வதறியாது திகைத்த உத்தவ் தாக்கரே தலைமையிலான மகா விகாஸ் அகாடி கூட்டணி அரசு, பொருளாதாரத்தில் பின்தங்கிய பொதுப்பிரிவினருக்கு வழங்கப்படும் 10 சதவீத இடஒதுக்கீடு மராத்தா சமூகத்தினருக்கு வழங்கப்படும் என்று அறிவித்துவிட்டது. எனினும், விவகாரம் அத்துடன் முடிந்துவிடவில்லை.

மல்லுக்கு நிற்கும் மராத்தாக்கள்

x