ஈழமும் சீமானும்!


இந்தியாவில் எப்போதுமே ட்ரெண்டிங்கில் இருக்கும் வெகு சிலரில் சீமானும் ஒருவர் என்றால் மிகையில்லை. குறிப்பாக, ஈழம், பிரபாகரன், விடுதலைப் புலிகள் ஆகியவை குறித்து சீமான் எது சொன்னாலும் சர்ச்சை ஆகும். இவற்றை சீமான் தன்னுடைய அரசியலுக்காக மட்டுமே பயன்படுத்துகிறார் என்று பொதுவாக விமர்சனம் வைக்கப்படுவதுண்டு. மத்திய அரசு ஒருபக்கம் ஓடிக்கொண்டிருக்க, தற்போது ஓடிடியில் வெளியாகியுள்ள ‘தி ஃபேமிலி மேன் - 2’ தொடர் தமிழர்களையும், ஈழப் போராட்டத்தையும் கொச்சைப்படுத்துவதாகக் கூறியுள்ளார் சீமான். இந்தத் தொடரை நிறுத்த வேண்டுமென போர்க்கொடி தூக்கியுள்ளார். இதற்கு ஆதரவாகவும் எதிராகவும் நெட்டிசன்கள் பதிவுகளை வெளியிட்டு வருகின்றனர். இதனால் சீமானுடன் சேர்ந்து ஈழமும் தனி ஹேஷ்டேக்குடன் ட்ரெண்டாகி வருகிறது.


**********************

தீபாவளி வரை நாடு முழுவதும் ஏழைகளுக்கு இலவசமாக ரேஷன் பொருட்கள் வழங்கப்படும். - மோடி
கொண்டக் கடலையே இன்னும் வேகல... ஓவர் ஓவர்!- சிவகுமார்

*****************************

x