இளையராஜா இயங்கிய இசைக்கூடம்!- பாடல்கள் வழியே ஒரு பயணம்


முனைவர், முன்னாள் அமைச்சர் வைகைச்செல்வன்
mlamailid@gmail.com

நாம் வாழ்ந்த வாழ்க்கையை அசைபோட்டுப் பார்ப்பது ஓர் அழகான கனவு. நமது பூர்விக வீட்டை யாருக்கோ விற்றுவிட்ட நிலையிலும்கூட, நம் பிள்ளைப்பருவத்தின் பெருங்கனவுகளையும், கண்ணீரையும் புதைத்துவைத்திருக்கும் அந்த வீட்டை மீண்டும் தொலைதூரத்தில் நின்று பார்த்து, நாம் வாழ்ந்திட்ட நினைவுகளை அசைபோடுவது ஓர் அகலாத நெகிழ்வும்கூட.

“மும்பையில் நாங்கள் வாழ்ந்த வீட்டை எங்களிடமிருந்து வாங்கியவர் தற்போது பல மாற்றங்கள் செய்துவிட்ட நிலையில், என் கனவுகளுக்குச் சிறகைத் தைத்த அவ்விடத்தை மீண்டும் உள்ளே போய் பார்க்காமல் வெளியே இருந்தேதான் பார்த்துவிட்டு வந்தேன்” என்று எழுத்தாளர் சல்மான் ருஷ்டி குறிப்பிடுகிறார். நாம் காதலித்த பெண்ணை, வேறொருவர் திருமணம் செய்துவிட்ட பிறகு, அக்காதலியை நாம் திரும்பிப் பார்ப்பதற்கு மனம் வருமா? அதே நிலைதான், சல்மான் ருஷ்டிக்கும் நடந்த நிகழ்வு. தற்போதைய காலத்துக்கு அவற்றையெல்லாம் ஒப்பிட்டுப் பார்த்தால், பிரசாத் ஸ்டூடியோவில் இளையராஜாவுக்கும் அவ்வாறே நடந்திருப்பதை உணர்ந்துகொள்ள முடியும்.

இரண்டறக் கலந்த இசை வாழ்வு

x