“தமிழகத்தில் லாட்டரி விற்பனையை மீண்டும் தொடங்கலாம்” என்று காங்கிரஸ் எம்பி-யான கார்த்தி சிதம்பரம் சொன்னபோது, பலரும் வேடிக்கையாகச் சிரித்தார்கள். ஆனால், அதற்கான பூர்வாங்க வேலைகளில் தமிழக அரசு இறங்கிவிட்டது. அண்மையில் மதுரைக்கு வந்திருந்த லாட்டரி அதிபர் மார்ட்டின், நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜனை அவரது இல்லத்தில் சந்தித்துப் பேசியிருக்கிறார். இந்தச் சந்திப்பை முன்னிறுத்திப் பேசும் சிலர், “பிற மாநில லாட்டரிகளை உள்ளே விடாமல், கேரளத்தைப் போல தமிழக அரசே லாட்டரி நடத்தும். இதற்கான அறிவிப்பு விரைவில் வெளியாகலாம்” என்கிறார்கள்.