எங்க அமைச்சர் சொல்லட்டும்


விவசாயம் தவிர குடிநீர் தேவைக்காகவும் அவ்வப்போது மேட்டூர் அணையிலிருந்து தண்ணீர் திறக்கப்படுவதுண்டு. அந்த வகையில் திருச்சி மாவட்ட குடிநீர் தேவைக்காக 2 ஆயிரம் கன அடி தண்ணீரை திறந்துவிடும்படி திருச்சி பொதுப்பணித் துறை (நீர்வள ஆதாரம்) தலைமைப் பொறியாளர் ராமமூர்த்தியிடம் சொன்னாராம் மாவட்ட அமைச்சர் கே.என்.நேரு. அதற்கு, “தாராளமாக திறக்கலாம்... அதுக்கு முன்னாடி எங்கள் துறை அமைச்சரிடம் ஒரு வார்த்தை கேட்டு விடுகிறோம்” என்று சொன்னாராம் ராமமூர்த்தி. இந்தப் பதிலைக் கேட்டு கொந்தளித்த நேரு, உடனே நீர்வளத் துறை அமைச்சர் துரைமுருகனைத் தொடர்பு கொண்டு, “நான் என்ன எனக்காகவா சொல்கிறேன்... மக்களுக்காகத்தானே கேட்கிறேன். நான் சொன்னால் செய்யமாட்டார்களா? நீங்கள் என்ன செய்வீர்களோ தெரியாது, ராமமூர்த்தியை இங்கிருந்து மாற்றியாக வேண்டும்” என்று ஆவேசப்பட்டாராம். “ராமமூர்த்தி நல்லா வேலை செய்யுற ஆளாச்சே” என்று சொல்லி நேருவை சமாதானப்படுத்திய துரைமுருகன், தானே ராமமூர்த்தியைத் தொடர்பு கொண்டு குடிநீர் தேவைக்கான தண்ணீரைத் திறந்துவிடும்படி கேட்டுக் கொண்டாராம். அதன் பிறகே தண்ணீர் திறக்கப்பட்டதாம்.

x