நீட்டை முறியடிக்க சரியான வழி- தமிழில் வருமா மருத்துவக் கல்வி?


கே.கே.மகேஷ்
magesh.kk@kamadenu.in

பொறியியல் படிப்புகளைத் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் உட்பட 8 மொழிகளில் நடத்த அகில இந்திய தொழில்நுட்பக் கல்விக் கவுன்சில் ஒப்புதல் வழங்கியிருக்கிறது. இதற்கான பாடப் புத்தகங்களைத் தயாரித்து வழங்கவிருப்பதாகவும் ஐஏசிடிஇ-யின் தலைவர் அனில் சகஸ்புரதே அறிவித்துள்ளார். இந்த நிலையில், இதேபோல மருத்துவக் கல்வியும் தமிழில் வர வேண்டும் என்ற கோரிக்கை எழுந்திருக்கிறது.

உதாரணங்கள் உண்டு

‘தமிழில் மருத்துவக் கல்வி சாத்தியமா?’ என்ற கேள்வி பலருக்கும் எழலாம். சாத்தியம்தான் என்பதற்கு நம் பக்கத்திலேயே உதாரணங்கள் இருக்கின்றன. இலங்கையின் கொழும்பு பல்கலைக்கழகத்தில் இப்போதும் தமிழில் மருத்துவக் கல்வி இருக்கிறது. தமிழ்நாட்டில் மருத்துவக் கல்வியைத் தமிழிலேயே நடத்தும் வகையில் கருணாநிதி ஆட்சிக் காலத்தில் சில முன்முயற்சிகளும் நடந்திருக்கின்றன.

x