மெகுல் சோக்சியும் ஃப்ராங்க் அபாக்னேலும்: குற்றச் சரித்திரத்தின் வெவ்வேறு முகங்கள்


வெ.சந்திரமோகன்
chandramohan.v@hindutamil.co.in

பஞ்சாப் நேஷனல் வங்கி மோசடியில் 13,500 கோடி ரூபாயை ஸ்வாகா செய்துவிட்டு, நாட்டைவிட்டு ஓடிப்போன வைர வியாபாரி மெகுல் சோக்சி மீண்டும் கவனத்துக்கு வந்திருக்கிறார். கரீபியன் கடலில் உள்ள தீவு தேசமான ஆன்டிகுவாவில் கடந்த மூன்று ஆண்டுகளாகத் தலைமறைவு வாழ்க்கை வாழ்ந்துவந்த சோக்சி சமீபத்தில் காணாமல் போனதாகவும், கடத்தப்பட்டதாகவும் பின்னர் அண்டை நாடான டொமினிகாவில் கைதுசெய்யப்பட்டதாகவும் வெளியான வெவ்வேறு தகவல்கள் பரபரப்பைக் கிளப்பியிருக்கின்றன. இந்த அமளிகளுக்கு இடையே அன்னாரைப் பிடித்து கையோடு இந்தியாவுக்குக் கொண்டுவரும் முயற்சிகளும் நடந்துகொண்டிருக்கின்றன.

திரைப்பட பாணி ‘த்ரில்’

இவ்விவகாரத்தில் அடுத்தடுத்து நகரும் காட்சிகள் விறுவிறுப்பான க்ரைம் த்ரில்லர் திரைப்படங்களை நினைவுபடுத்துகின்றன. ஆம்! சோக்சி தொடர்பான செய்திக்கு ‘Catch Me If You Can’ என்று மிகப் பொருத்தமாகத் தலைப்பிட்டிருந்தது ஓர் ஆங்கில நாளிதழ். அதை எழுதிய பத்திரிகையாளரின் திரைப்பட ரசனையை அந்தத் தலைப்பு உறுதிப்படுத்தியது.

x