தேர்தல் தோல்வி... தெளிவற்ற தலைமை!- கேரளக் காங்கிரஸுக்கு என்னதான் ஆச்சு?


என்.சுவாமிநாதன்
swaminathan.n@kamadenu.in

காங்கிரஸ் கட்சி வீரியத்துடன் இருக்கும் மாநிலங்களில் கேரளம் முக்கியமானது. நடந்துமுடிந்த சட்டப்பேரவைத் தேர்தலில் கிடைத்த தோல்வி கேரளத்தில் அக்கட்சியின் ஆணிவேரையே அசைத்துப் பார்த்துள்ளது. எதிர்க்கட்சித் தலைவராக இருந்த ரமேஷ் சென்னிதலா, கேரள மாநில காங்கிரஸ் தலைவர் முல்லப்பள்ளி ராமசந்திரன் என மூத்த நிர்வாகிகள் மட்டத்தில் ஒலித்துவரும் அதிருப்திக் குரல்கள், கேரளத்தில் காங்கிரஸ் கட்சிக்குள் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.

கேரளத்தில் ஒரே கட்சி தொடர்ச்சியாக இரண்டு முறை வென்றதில்லை என்பது நாற்பதாண்டு கால வரலாறு. ஆனால், மார்க்சிஸ்ட் கட்சி அந்த வரலாற்றைத் தகர்த்து மீண்டும் அரியணை ஏறிவிட்டது. மொத்தமுள்ள 140 தொகுதிகளில் மார்க்சிஸ்ட் கட்சியின் தலைமையிலான எல்டிஎஃப் கூட்டணி 99 இடங்களிலும், காங்கிரஸ் தலைமையிலான யுடிஎஃப் கூட்டணி 41 இடங்களிலும் வென்றன. சபரிமலை பிரச்சினை, தங்கக்கடத்தல் விவகாரம் என மார்க்சிஸ்ட் கட்சிக்கு எதிராகக் காங்கிரஸும் பாஜகவும் வலுவான பிரச்சாரத்தை முன்னெடுத்தபோதும் பெரும் வாக்குகள் வித்தியாசத்தில் வாகைசூடியது மார்க்சிஸ்ட் கட்சி.

இறங்கும் ராகுல்காந்தி மவுசு

x