கட்சியின் தோல்விக்குக் காரணம் என்ன?- இந்திய யூனியன் முஸ்லிம் லீக்கில் கலகக் குரல்கள்


கே.சோபியா
readers@kamadenu.in

இஸ்லாமியர்களுக்கென ஆண்டுதோறும் புதுப் புது கட்சிகள் தோன்றி மறைந்தாலும், இந்திய விடுதலைக்கு முன்பே உருவாகி இன்னமும் நிலைத்து நிற்கிற கட்சியாகத் திகழ்கிறது இந்திய யூனியன் முஸ்லிம் லீக். 1906-ல் டாக்காவில் தொடங்கப்பட்ட அந்தக் கட்சியின் தலைவராக முகமது அலி ஜின்னா இருந்தபோது, காங்கிரஸ் கட்சிக்கும் அவருக்கும் இடையிலான கடுமையான கருத்து வேறுபாடு, இறுதியில் தேசப் பிரிவினையில் போய் முடிந்தது.

“காங்கிரஸ் கட்சியில் இருப்பவர்கள் மட்டுமே உண்மையான தேசியவாத முஸ்லிம்கள். முஸ்லிம் லீக்கில் இருப்பவர்கள் பிரிவினைவாதிகள்” என்ற பிரச்சாரம் காரணமாகப் பலர் முஸ்லிம் லீக் கட்சியிலிருந்து விலகினார்கள். வடஇந்தியாவில் செல்வாக்கை இழந்த அக்கட்சி, தென்னிந்தியாவில் மட்டும் தன்னுடைய பிடிமானத்தைத் தக்கவைத்துக் கொண்டது. அதற்கு முக்கியக் காரணமாகத் திகழ்ந்தவர் ஜின்னாவுக்குப் பிறகு கட்சியின் தலைவரான காயிதே மில்லத். தனது கண்ணியமான அரசியலால் கட்சிக்கு மதிப்பையும், கட்சியினருக்குத் தேசியவாதிகள் என்ற நற்பெயரையும் பெற்றுக்கொடுத்தார் அவர்.

தமிழகத்தில் பின்னடைவு

x