தொடர் ட்ரெண்டிங்கில் ஸ்டாலின்


தேர்தலில் வெற்றி பெற்று முதல்வராகி ஒரு மாதம் ஆகிவிட்டது. ஆனாலும் கரோனா காரணத்தினால் ஸ்டாலின் தினமும் பேசுபொருளாக இருந்துவருகிறார். இவர் என்னதான் செய்கிறார் பார்ப்போம் என்ற கூட்டம் ஒருபக்கம், தந்தையைப் போலவே அதிரடியாக செயல்படுகிறார் என்ற ஆதரவு கூட்டம் ஒருபக்கம். இவருடைய அறிவிப்புகள், சலுகைகள், கரோனா கால நடவடிக்கைகள் அனைத்தையும் கூர்ந்து கவனித்து வருகிறார்கள். கடந்த வாரம் இவர் கோவையில் கரோனா வார்டை பார்வையிடச் சென்றது இணையத்தில் பெரும் வைரலாகியிருக்கிறது. பப்ளிசிட்டிக்காக செய்கிறார் என்று பலர் விமர்சனம் செய்தனர். அதற்கு திமுக ஆதரவாளர்கள் எதிர்வினை ஆற்றினர். இதனால் ‘கோபேக் ஸ்டாலின்’ ஹேஷ்டேகும், ‘ஸ்டாண்ட் வித் ஸ்டாலின்’ ஹேஷ்டேகும் பெரிய அளவில் ட்ரெண்ட் ஆனது. சிலரோ, ஐபேக் டீம் தான் ட்ரெண்ட் செய்ய காரணம் என்கிறார்கள். எது எப்படியோ பப்ளிசிட்டிக்காக என்றாலும் பப்ளிக்குக்கு நல்லது நடந்தால் சரி!

***************************************************

இந்தியாவில் கோடிக்கணக்கான குடும்பங்களில் மகிழ்ச்சி நிலவுகிறது. - மோடி

ஏழு வருசம் தாண்டீட்டோம்... இன்னும் மூணு வருசம் தானேங்கிற சந்தோசமா இருக்கும் ஜி!- ஷிவானி

x