கே.கே.மகேஷ்
magesh.kk@kamadenu.in
பொதுமுடக்க காலத்தில் மூடப்பட்ட மதுக்கடைகளை அப்படியே படிப்படியாக மூட வேண்டும் என்ற குரல்கள் ஒலிக்கும் அதே நேரத்தில், “தமிழக அரசு நிதி நிலையைச் சமாளிக்க மீண்டும் லாட்டரி சீட்டு விற்பனையைத் தொடங்கலாம்” என்ற விபரீதமான யோசனை ஒன்றைச் சொல்லியிருக்கிறார் காங்கிரஸ் எம்பி-யான கார்த்தி சிதம்பரம்!
லாட்டரி வரமா சாபமா?
தமிழ்நாடு அரசுக்கு வருவாய் ஈட்டும் பொருட்டு தமிழ்நாட்டில் பரிசுச் சீட்டு (லாட்டரி டிக்கெட்) திட்டத்தைத் தொடங்கி வைத்தார் அன்றைய முதல்வர் அறிஞர் அண்ணா. அதைத் தொடங்கியபோதே, இது மக்களிடம் சூதாட்ட மனப்பான்மையை வளர்த்துவிடும் என்று எதிர்ப்பு தெரிவித்தார் மூதறிஞர் ராஜாஜி. ‘விழுந்தால் வீட்டுக்கு விழாவிட்டால் நாட்டுக்கு’ என்பது போன்ற கவர்ச்சிகரமான வாசகங்கள், ஏழை, எளிய மக்களையும் லட்சாதிபதிகளாக மாற்றும் திட்டம் போன்ற விளம்பரங்கள் காரணமாக அடித்தட்டு மக்கள் பலர் அந்த கெட்ட பழக்கத்துக்கு ஆளானார்கள். பலருக்குப் பொழுதே லாட்டரிச் சீட்டில்தான் விடியும் என்கிற அளவுக்கு அது முற்றிப்போனது.