ஆன்லைன் வகுப்பும் ஆசிரியரின் அநாகரிகமும்!


ஆன்லைன் வகுப்புகளால் ஏற்கெனவே மாணவர்கள் கடும் மன உளைச்சலுக்கு ஆளாகி வருகிறார்கள். இந்த நிலையில் சென்னை பிஎஸ்பிபி பள்ளி ஆசிரியர் ஆன்லைன் வகுப்பில் மாணவிகளிடம் முறைகேடாக நடந்து கொண்டது பெரும் சர்ச்சையை கிளப்பியிருக்கிறது. கைது செய்யப்பட்ட அந்த ஆசிரியர், பள்ளியில் பல ஆண்டுகளாக இதுபோன்று நடப்பதாகவும், இன்னும் பல ஆசிரியர்கள் இப்படித்தான் என்று கூறியிருப்பதும் பள்ளி நிர்வாகத்தின் மீது கடும் விமர்சனங்களை கிளப்பி இருக்கிறது. ஒய்.ஜி.மகேந்திரன் குடும்பத்தினருக்குச் சொந்தமான பள்ளி என்பதால் அவரும் அவரது மகள் மதுவந்தியும் முன்பு பேசிய வீடியோக்களை பகிர்ந்து விஷயத்தை வைரலாக்கி வருகின்றனர். இதே பள்ளியில் இருந்து பாதியில் நிறுத்தப்பட்டவர் ஏ.ஆர்.ரஹ்மான் என்பதும் இந்த விவகாரத்தில் பெரும் பேசுபொருளாகியிருக்கிறது. பள்ளியை தடை செய்ய வேண்டும் என்றும் நெட்டிசன்கள் கூறிவருகிறார்கள். இன்னொரு பக்கம் பள்ளிக்கு ஆதரவாகவும் சிலர் பேசிவருகிறார்கள். இந்த விவகாரம் இனி எந்த ரூட்டில் எல்லாம் பயணிக்கும் என்பது போகப் போகத்தான் தெரியும்!

----------------------------------

கரோனா பரவல் குறைந்தபின் பிளஸ் 2 பொதுத்தேர்வு நடத்த, மத்திய அரசிடம் தமிழக அரசு வலியுறுத்தல். - செய்தி
தேர்தலையும் அப்படி நடத்தச் சொல்லி இருந்தா இவ்ளோ அதிகமான பரவலும் ஏற்பட்டு இருக்காதே..?!- மயக்குநன்

********************

x