ஓரங்கட்டப்பட்ட சைலஜா டீச்சர்!- பிரபலமான பெண்களை பின்னுக்குத் தள்ளுகிறதா சிபிஎம்?


என்.சுவாமிநாதன்
swaminathan.n@kamadenu.in

தொடர்ந்து இரண்டாவது முறையாக ஆட்சிக்கு வந்து, 40 ஆண்டுகால கேரள அரசியல் வரலாற்றையே மாற்றியமைத்த பினராயி விஜயன், இப்போது பலரது விமர்சனத்துக்குள்ளாகி யிருக்கிறார். நிபா தொடங்கி கரோனா வரை களத்தில் நின்று பணியாற்றி அனைவரின் கவனத்தையும் ஈர்த்த சுகாதாரத் துறை அமைச்சர் கே.கே.சைலஜாவுக்கு, இந்த முறை அமைச்சரவையில் இடம் தரப்படாதது சர்ச்சையின் மையப்புள்ளி ஆகியிருக்கிறது.

இரண்டு முறை வெற்றிபெற்ற எம்எல்ஏ-க்களுக்கு, மீண்டும் சீட் இல்லை என்னும் நிலைப்பாட்டை எடுத்து அமைச்சரவையில் இருந்த பல முக்கியஸ்தர்களுக்கு இந்த முறை தேர்தலில் போட்டியிடும் வாய்ப்பையே தர மறுத்துவிட்டது கேரள மார்க்சிஸ்ட் கட்சி. வெற்றி பெற்றுவிட்ட நிலையில், முந்தைய அமைச்சரவையில் இடம்பிடித்த அமைச்சர்களுக்கு மீண்டும் அமைச்சர் வாய்ப்பு இல்லை எனும் நிலைப்பாட்டை எடுத்துவிட்டது கட்சி. பினராயி விஜயனைத் தவிர்த்து அவரது அமைச்சரவையில் இடம்பெற்றிருக்கும் அனைவருமே புதுமுகங்கள்தான். அதில்தான் மீண்டும் அமைச்சராகும் வாய்ப்பை இழந்திருக்கிறார் சைலஜா.

ஏமாற்றம் தந்த முடிவு

x