பதுங்கும் ரங்கசாமி... பாய்ச்சல் காட்டும் பாஜக!- புதுவையில் தொடரும் கூட்டணி புகைச்சல்


கரு.முத்து
muthu.k@kamadenu.in

புதுவையில் இன்னமும் அரசியல் புயல் ஓயவில்லை. முதல்வராகப் பதவியேற்று இரண்டு வாரங்களைக் கடந்தும்கூட தனது அமைச்சரவையை அமைக்காமலும், சட்டப்பேரவையைக் கூட்டாமலும் காலம் கடத்திவருகிறார் ரங்கசாமி. துணை முதல்வர் பதவியும், மூன்று அமைச்சர் பதவிகளும் தங்களுக்கு வேண்டும் என்ற பாஜகவின் கிடுக்கிப்பிடியிலிருந்து விடுபட முடியாமல் ரங்கசாமி இப்படி பதுங்கிவரும் நிலையில், பாஜகவோ அவரை ஒரு பொருட்டாகவே கருதாமல் அசுரப் பாய்ச்சலில் அரசை வழிநடத்த முயற்சித்து வருகிறது.

நழுவல் முயற்சிகள்

ரங்கசாமியின் என்.ஆர்.காங்கிரஸ் கட்சியுடன் கூட்டணி போட்டு தேர்தலில் ஆறு இடங்களை வென்ற பாஜக, ரங்கசாமி முதல்வராகப் பதவியேற்ற சமயத்திலேயே நமச்சிவாயத்தைத் துணை முதல்வராகப் பதவியேற்கச் செய்ய பகீரத முயற்சிகளை எடுத்தது. ஆனால், அதைப் பிறகு பார்த்துக்கொள்ளலாம் என்று பாஜகவுக்குப் போக்குக் காட்டினார் ரங்கசாமி. அமைச்சரவையில் பங்கு குறித்தும் பின்னர் பேசித் தீர்த்துக்கொள்ளலாம் என்று சொன்ன ரங்கசாமி அதுகுறித்து உடனடியாக முடிவெடுக்காமல் தனது வீட்டுக்குள் முடங்கினார்.

x