ஓபிஎஸ்ஸை வீழ்த்த எனக்கு உதவிசெய்தாரா ஈபிஎஸ்?- தங்கதமிழ்ச்செல்வன் பேட்டி


கே.கே.மகேஷ்
magesh.kk@kamadenu.in

போடியில் ஓபிஎஸ்ஸிடம் தோற்ற பிறகு தங்கதமிழ்ச்செல்வன் ரொம்பவே அமைதியாகி விட்டார். அடுத்து அவர் என்ன முடிவில் இருக்கிறார் என்று அறிவதற்காக அவரை காமதேனு வார இதழுக்காகத் தொடர்பு கொண்டேன். இனி பேட்டி...

தேனி மாவட்டத்தில் உங்களைத் தவிர அத்தனை திமுக வேட்பாளர்களும் வென்றுவிட்டார்கள். உங்கள் தோல்விக்கான காரணத்தை ஆராய்ந்தீர்களா?

இந்தத் தேர்தலில் அதிமுக தோற்கணும், திமுக ஜெயிக்கணும், தளபதி முதல் அமைச்சர் ஆகணும் என்பது மக்களின் ஒருமித்த முடிவு. அதனால்தான் பெரியகுளம், கம்பம், ஆண்டிப்பட்டியில் திமுக ஜெயித்தது. அந்த அலையில் போடியில் நான் ஜெயித்திருக்கணும். சிலரது காழ்ப்புணர்ச்சி கொஞ்சம் விளையாடியிருக்குது. நமக்கு ஓட்டு விழ வேண்டிய இடத்தில் ஓட்டு விழாமல் போயிருக்கிறது. ஓபிஎஸ்ஸின் பண பலத்தின் சூழ்ச்சியில் எங்கள் கட்சியிலேயே சிலர் மாட்டிவிட்டார்கள். இல்லை என்றால், அவர் மீதிருந்த கடுமையான எதிர்ப்பில், ஊருக்குள்ளேயே விடாமல் அவரைத் துரத்தியடித்தது, அவரது மகனது கார் கண்ணாடியை உடைத்தது எல்லாவற்றையும் தாண்டி அவர் எப்படி ஜெயிக்க முடியும்?

x