பெருந்தொற்றுக்கு எதிரான விஞ்ஞான வேள்வி!- களத்தில் இறங்கிய டி.ஆர்.டி.ஓ நிறுவனம்


ராணுவ விஞ்ஞானி டாக்டர் வி.டில்லிபாபு
dillibabudrdo@gmail.com

ஆழிப்பேரலையாய் வாரிச்சுருட்டும் கரோனா வின் இரண்டாம் அலையில் தேசமே கதிகலங்கியிருக்கும் நிலையில், நம்பிக்கைக் கீற்றாய் வந்திருக்கிறது டி.ஆர்.டி.ஓ விஞ்ஞானிகள் உருவாக்கியுள்ள ‘2டிஜி’ கரோனா எதிர்ப்பு மருந்து. டி.ஆர்.டி.ஓ நிறுவனத்தின் ஆக்ஸிஜன் கருவிகளும் சமீபத்தில் தேசத்தின் கவனத்தை ஈர்த்தன. டி.ஆர்.டி.ஓ நிறுவனம் என்பது என்ன? 2டிஜி மருந்தின் சிறப்புகள் என்ன? ஆக்ஸிஜன் கருவிகளின் தனித்தன்மை என்ன? கரோனா எதிர்ப்புக்காக, வேறு என்னென்ன தொழில்நுட்பங்களை டி.ஆர்.டி.ஓ விஞ்ஞானிகள் உருவாக்கியிருக்கிறார்கள்? பார்க்கலாம்!

தேசம் காக்கும் நிறுவனம்

இந்திய அரசின் பாதுகாப்பு அமைச்சகத்தின் ஆராய்ச்சி நிறுவனம் ‘பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு நிறுவனம்' (Defence Research and Development Organisation -DRDO). அக்னி, பிரமோஸ், மிஷன் சக்தி உள்ளிட்ட ஏவுகணைகள், அர்ஜூன் போர் வாகனம், தேஜஸ் போர் விமானம் போன்ற டி.ஆர்.டி.ஓ-வின் போர்க்கருவிகள் பொதுவெளியில் பிரபலமானவை. தரை, வான், கடல் மற்றும் துணைராணுவப் படைகளுக்குத் தேவையான பாதுகாப்புக் கருவிகளையும் ஆயுதங்களையும் வடிவமைத்து தேசப் பாதுகாப்புக்கு உத்தரவாதம் தருகிறது டி.ஆர்.டி.ஓ.

x