என் வயதுடையவர்கள் இப்படி அலைவது குறைவு!- ஓய்வுபெற்ற மின் பொறியாளரின் வனப்பயணம்


கா.சு.வேலாயுதன்
velayuthan.kasu@kamadenu.in

வால்பாறை மலைகளின் உச்சாணிக் கொம்பில் வீற்றிருப்பது சோலையாறு. இங்கே உள்ள மானாம்பள்ளி மின் உற்பத்தி நிலையம் அடர்ந்த வனப்பிரதேசம். அவ்வளவு சுலபமாய் யாரும் உள்ளே செல்ல அனுமதிக்கப்படுவதில்லை. இங்கே அன்றாடம் 8 கிலோமீட்டர் தூரம் அடர்வனங்களுக்குள் சென்று செயற்பொறியாளராகப் பணிபுரிந்து ஓய்வுபெற்ற பொன்மூர்த்தி, இன்றைக்குக் கானுயிர் புகைப்படக் கலையில் சிறந்து விளங்குகிறார். வனத் துறையினர், பள்ளி - கல்லூரி மாணவர்கள், இயற்கை ஆர்வலர்கள் என சகலருக்கும் தனது அனுபவங்களைப் புகைப்படங்கள், காணொலிகள் மூலம் விவரிக்கிறார். வகுப்புகள் நடத்துகிறார்.

சமீபத்தில் நைனிடால் சென்று ஏராளமான புகைப்படங்களுடனும், அரிய அனுபவங்களுடனும் ஊர் திரும்பிய பொன்மூர்த்தியைச் சந்தித்துப் பேசினேன். செயற்பொறியாளராக இருந்து கானுயிர்ப் புகைப்படக் கலைஞராக மாறிய கதையை நம்முடன் பகிர்ந்துகொண்டார்.

“வனத்துக்குள் செல்லும்போது யாருக்கும் கிடைத்தற்கரிய காட்சிகளைக் கண்டிருக்கிறேன். யானைகள் கூட்டம் கூட்டமாகத் தென்படும். மான் கூட்டங்கள் கண்ணுக்கு எதிரே தாவிச் செல்லும். புலி, சிறுத்தை போன்ற விலங்குகள் வேட்டையாடுவதையும் பார்த்திருக்கிறேன்.

x