தமாகாவில் வாசனைத் தவிர யாரும் இருக்கமாட்டார்கள்!- கொந்தளிக்கிறார் கோவை தங்கம்


கா.சு.வேலாயுதன்
velayuthan.kasu@kamadenu.in

தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியில் போட்டியிட வாய்ப்பு தரப்படாததால், கோபித்துக்கொண்டு திமுகவில் இணைந்த கோவை தங்கம், மு.க.ஸ்டாலின் கேட்டுக்கொண்டதால் திமுக கூட்டணிக்காகப் பிரச்சாரம் செய்தார். அவர் ஆதரித்துப் பிரச்சாரம் செய்த இந்திய கம்யூனிஸ்ட் கட்சி வேட்பாளர் ஆறுமுகம் தோல்வியடைந்த நிலையிலும், ஸ்டாலினிடம் நற்பெயரைத் தக்கவைத்துக்கொண்டிருக்கிறார். தமாகாவிலிருந்து பலரைத் திமுகவில் சேர்த்து ஜி.கே.வாசனுக்கு அதிர்ச்சி வைத்தியம் அளித்திருக்கிறார். தமாகாவின் மாநிலத் துணைத் தலைவராக இருந்து திமுகவுக்குத் தாவிய கோவை தங்கம் காமதேனு மின்னிதழுக்காக அளித்த பேட்டியிலிருந்து...

 உங்களுக்கு செல்வாக்கு உள்ள வால்பாறையில் நீங்கள் பிரச்சாரம் செய்தும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி வேட்பாளர் ஆறுமுகம் தோற்றுவிட்டாரே?

“வால்பாறையில் ஒரு இரண்டு நாள் பிரச்சாரம் செய்யுங்க” என ஸ்டாலின் சொன்னபோதே, “ஆறுமுகம் தொகுதியில் செல்வாக்கை இழந்துவிட்டார். அவர் நிச்சயமாக ஜெயிக்க முடியாது. நீங்க சொல்றதுக்காக உங்க பேரைச் சொல்லி ஓட்டுக் கேட்க போறேன்”னு சொல்லிவிட்டுத்தான் போனேன். நானும் முன்னாள் அமைச்சர் பொங்கலூர் பழனிசாமியும் பிரச்சாரம் செய்யப் போவதற்குச் செல்வதற்கு முன்பு ஒரு பிரச்சார வாகனத்தை அனுப்பச் சொன்னேன். ‘கோவை தங்கம் வருகிறார்; பொங்கலூர் பழனிசாமி வருகிறார்’ என அறிவிப்பு செய்யச் சொன்னேன். ஆனால், சரியான ஏற்பாடுகள் செய்யப்படவில்லை. இதுபோன்ற காரணங்களால் என் பிரச்சாரம் கைகொடுக்கவில்லை.

x