மூன்றாம் உலகப் போரின் உயிரி ஆயுதமா கரோனா?- சீனாவுக்கு எதிராக வாள்பிடிக்கும் சர்ச்சைகள்


வெ.சந்திரமோகன்
chandramohan.v@hindutamil.co.in

கரோனா பெருந்தொற்றின் பேரழிவுகளுக்கு நடுவே நாம் பரிதவித்துக்கொண்டிருக்கும் சமயத்தில், இந்த வைரஸ் பரவல் சீனா ஏற்படுத்திய உயிரியல் போர் என்று வெளியாகியிருக்கும் தகவல் பலரைத் துணுக்குற வைத்திருக்கிறது. கரோனா வைரஸை ஒரு உயிரி ஆயுதமாகப் பயன்படுத்துவது தொடர்பாக 2015-லேயே சீனாவின் ராணுவ உயரதிகாரிகளும், சுகாதாரத் துறை உயரதிகாரிகளும் ஆலோசித்ததாக வெளியாகியிருக்கும் செய்திகள் இந்தச் சர்ச்சைக்கு, மேலும் வலு சேர்த்திருக்கின்றன.

பிரேசில் அதிபர் போல்ஸனாரோ போன்றோர் சீனா மீது பகிரங்கமாகவே குற்றம்சாட்டியிருக்கிறார்கள். “கரோனா வைரஸ் இயற்கையாக உருவானதல்ல. ஆய்வகங்களில் உருவாக்கப்பட்ட உயிரி ஆயுதம்” என்பது அவரைப் போன்றோரின் வாதம்.

புதிய சதிக்கோட்பாடு?

x