மிஸ்டர் தர்மயுத்தம் பார்ட் 2!


அதிமுக முகாமில் மீண்டும் ஒரு தர்மயுத்தம் நடப்பதற்கான சூழல் உருவாகியுள்ளது. தேர்தலில் அதிமுக முதல்வர் வேட்பாளராக எடப்பாடியார் தேர்ந்தெடுக்கப்பட்டதிலிருந்து கடுப்பு மோடுக்கு போய்விட்டார் ஓபிஎஸ். தேர்தல் முடிவுகளுக்குப் பிறகு எதிர்க்கட்சித் தலைவரைத் தேர்ந்தெடுப்பதில் மீண்டும் ஒபிஎஸ் - ஈபிஎஸ் இடையே உரசல் பற்றிக்கொண்டது. ஒருவழியாக எடப்பாடியார் எதிர்க்கட்சித் தலைவராக அறிவிக்கப்பட்டுவிட்டார். ஆனால், இருவரிடையேயும் புகைச்சல் அடங்கவில்லை. போதாததுக்கு சின்னம்மா மீண்டும் கட்சியைக் கைப்பற்ற வேண்டும் என அவரது ஆதரவாளர்கள் போஸ்டர் ஒட்டுகிறார்கள். இடையில் பாஜக வேறு. இதனால் மீண்டும் ஒரு தர்மயுத்தத்தை ஓபிஎஸ் நடத்துவாரா, அதிமுக உடையுமா போன்ற விவாதங்கள் இணையத்தில் களைகட்டுகின்றன. மீம்களும் பறக்கின்றன. அதிமுகவில் எதுவும் நடக்கலாம் என்ற சஸ்பென்ஸ் தொடர்கிறது.

**********************

சட்டமன்ற எதிர்கட்சி தலைவராக எடப்பாடி பழனிச்சாமி தேர்வு.

வாழ்க்கை நாடகமா... என் பொறப்பு பொய் கணக்கா..?! (ஓபிஎஸ் மைண்ட் வாய்ஸ்)
- மித்ரன்

x