வெ.சந்திரமோகன்
chandramohan.v@hindutamil.co.in
கரோனா பெருந்தொற்றிலிருந்து மீண்டுவந்துவிட்டதாகச் சமீப காலமாகப் பேசப்பட்டுவந்த இஸ்ரேல், இப்போது இன்னொரு விவகாரம் தொடர்பாகத் தலைப்புச் செய்தி களில் இடம்பெற்றிருக்கிறது.
பாலஸ்தீனப் போராளி இயக்கமான ஹமாஸ் இயக்கம் இஸ்ரேல் மீது நடத்திவரும் ஏவுகணைத் தாக்குதல்கள் சர்வதேச ஊடகங்களில் முக்கிய இடத்தைப் பெற்றிருக்கின்றன. இஸ்ரேலும் கடும் தாக்குதலில் இறங்கியிருக்கிறது. 2014-ல் கிட்டத்தட்ட ஏழு வார காலம் நீடித்த மோதலுக்குப் பின்னர், இருதரப்புக்கும் இடையில் நடக்கும் தீவிரமான தாக்குதல் என இது கருதப்படுகிறது. மோதலின் உக்கிரம் தணிக்கப்படாவிட்டால், அது இன்னொரு போராக மாறலாம் எனும் அச்சமும் எழுந்திருக்கிறது.
உண்மையில், இந்தக் களேபரத்துக்குக் காரணம் ஹமாஸ் இயக்கம் அல்ல; இஸ்ரேலின் எதேச்சதிகாரப் போக்குதான் என்று பலரும் பதிவிட்டு வருகிறார்கள். எங்கிருந்து தொடங்கியது இந்த மோதல்?