மீண்டும் கம்யூனிஸ்ட் ஆட்சி!- 40 ஆண்டு கால சரித்திரத்தை உடைத்த கேரளம்


சந்தனார்
readers@kamadenu.in

கேரளத்தில் கடந்த 40 வருடங்களாக, காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய ஜனநாயக முன்னணியும் (யூடிஎஃப்), மார்க்சிஸ்ட் கட்சி தலைமையிலான இடதுசாரி ஜனநாயக முன்னணியும் (எல்டிஎஃப்) மாறி மாறி ஆட்சியமைத்துவந்த நிலையில், முதன்முறையாக அடுத்தடுத்த தேர்தலில் வெற்றிபெற்று ஆட்சியைத் தக்கவைத்துக்கொண்டிருக்கிறது மார்க்சிஸ்ட் கட்சி.

மேற்கு வங்கத்தில் துடைத்தகற்றப்பட்ட மார்க்சிஸ்ட்டுகளுக்குக் கேரள வெற்றி மிகப் பெரும் ஆறுதலாக அமைந்திருக்கிறது. எல்டிஎஃப் தரப்பில் மார்க்சிஸ்ட் கட்சி 62 இடங்களில் வென்றிருக்கிறது. இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சிக்கு 17 இடங்களும், கேரள காங்கிரஸ் (எம்) கட்சிக்கு 5 இடங்களும் கிடைத்திருக்கின்றன.

2020 டிசம்பரில் நடந்த உள்ளாட்சித் தேர்தலில் பெரும் வெற்றி பெற்றிருந்த எல்டிஎஃப் கூட்டணி, இந்த முறையும் அபார வெற்றி பெற்று காங்கிரஸ் கூட்டணியைக் கலங்கடித்திருக்கிறது. கூடவே, மலையாள மண்ணில் துளிர்க்க முயன்ற தாமரையை முற்றாகக் கிள்ளியெறிந்திருக்கிறது.

x