விசிக வளர்கிறது... பாமக தேய்கிறது!- ஆளூர் ஷாநவாஸ் அதிரடி


கரு.முத்து
muthu.k@kamadenu.in

இந்தத் தேர்தலில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சிக்குக் கிடைத்திருக்கும் வெற்றி, பரவலான அதன் அரசியல் வளர்ச்சியை அழுத்தமாகப் பதிவுசெய்திருக்கிறது. திமுக கூட்டணியில் 6 தொகுதிகளில் போட்டியிட்ட விசிக, 2 பொதுத்தொகுதிகள் உட்பட 4 தொகுதிகளைக் கைப்பற்றியுள்ளது. திமுகவின் பிற கூட்டணிக் கட்சிகள் உதயசூரியன் சின்னத்தில் போட்டியிட்டபோது, விசிக மட்டும் துணிந்து தனிச் சின்னத்தில் (பானை) போட்டியிட்டு இந்த வெற்றியைப் பெற்றிருப்பது திருமாவளவனின் அரசியல் சாதுரியத்துக்குக் கிடைத்திருக்கும் வெற்றியாகவே பார்க்கப்படுகிறது.

இந்த வெற்றிகளின் மூலம் விசிக என்பது தனித் தொகுதிக்கான கட்சி அல்ல. பொது தொகுதிகளுக்குமான கட்சி, அனைத்து மக்களுக்குமான கட்சி என்பதைத் திருமாவளவன் அரசியல் அரங்குக்கு உணர்த்தியிருப்பதாக அரசியல் பார்வையாளர்கள் கருதுகிறார்கள். நாகப்பட்டினம் தொகுதி சட்டப்பேரவை உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள மாநில துணைப்பொதுச் செயலாளர் ஆளூர் ஷாநவாஸிடம் விசிக வெற்றி குறித்துப் பேசினோம்.

தமிழகத் தேர்தல் முடிவுகளை எப்படிப் பார்க்கிறீர்கள்?

x