கைவிடப்பட்ட ‘காவிரிக் காப்பாளர்’- அதிமுகவை காலைவாரிய காவிரி டெல்டா!


கரு.முத்து
muthu.k@kamadenu.in

கடந்த ஆண்டு மார்ச் 7-ல் திருவாரூரில் ஆயிரக்கணக்கான விவசாயிகள் மிகப் பெரிய விழாவுக்காகத் திரண்டிருந்தார்கள். காவிரி டெல்டாவைப் பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக அறிவிக்க வேண்டும் என நீண்ட நெடுங்காலமாக விவசாயிகள் முன்வைத்துவந்த கோரிக்கையை நிறைவேற்றிய எடப்பாடி பழனிசாமிக்கு நடந்த பாராட்டு விழா அது. அதில் பச்சைத்துண்டு அணிந்து பெருமிதத்துடன் பங்கேற்றார் (அப்போதைய முதல்வர்!) பழனிசாமி. அவரை வானளாவப் போற்றிப் புகழ்ந்த விவசாயிகள் அவருக்கு ‘காவிரிக் காப்பாளர்’ என்ற பட்டத்தையும் அளித்தனர்.

தங்கள் மண்ணைப் பாதுகாக்க உறுதுணையாக இருந்த பழனிசாமிக்கு என்றும் விசுவாசமாக இருப்பதாகவும் விவசாயிகள் அப்போது உத்தரவாதம் அளித்தனர். ஆனால், நடந்து முடிந்த சட்டப்பேரவைத் தேர்தலில் அந்த உத்தரவாதம் காற்றில் பறந்தது. ஆம்! காவிரி டெல்டாவில் மொத்தமுள்ள 41 தொகுதிகளில் அதிமுகவுக்குக் கிடைத்திருப்பது (விராலிமலை, ஒரத்தநாடு, நன்னிலம், வேதாரண்யம்) நான்கே நான்கு தொகுதிகள் மட்டுமே. காவிரி பகுதியாக பாயும் கடலூர் மாவட்டத்திலும்கூட விவசாயிகள் அவ்வளவாக அதிமுகவுக்குக் கைகொடுக்கவில்லை. ‘காவிரிக் காப்பாளர்’ கைவிடப்பட்டதன் காரணம் என்ன?

விவசாயியின் ஆட்சி!

x