பாஜகவை வதம் செய்த வங்கத்துப் பெண் புலி!- தேசத்தைத் திரும்பிப் பார்க்க வைத்த தேர்தல் வெற்றி


வெ.சந்திரமோகன்
chandramohan.v@hindutamil.co.in

மேற்கு வங்க தேர்தல் யுத்தத்தில், விழுப்புண்களுடன் வெற்றி பெற்று தேசத்தையே திரும்பிப் பார்க்கவைத்திருக்கிறார் ‘தீதி’.
ஆம்! ஆள், அம்பு, சேனை என அத்தனை ஆயுதங்களையும் பயன்படுத்தி களத்தில் நின்ற பாஜகவுக்கு மம்தா பானர்ஜி கொடுத்திருக்கும் பலத்த அடி, நாடு முழுவதும் பாஜகவுக்கு எதிராக நிற்கும் கட்சிகளுக்குப் பெரும் உற்சாகத்தைத் தந்திருக்கிறது. பல தடைகளைக் கடந்து தொடர்ந்து மூன்றாவது முறையாக முதல்வராகியிருக்கிறார் மம்தா.

“நிச்சயம் இரட்டை செஞ்சுரி அடிப்பேன்” என்று சபதம் செய்து அதை நிறைவேற்றிக் காட்டியிருக்கிறார் மம்தா. மொத்தம் உள்ள 294 தொகுதிகளில் திரிணமூல் காங்கிரஸுக்கு 213 இடங்களும், பாஜகவுக்கு 77 இடங்களும் கிடைத்திருக்கின்றன. இடதுசாரிக் கட்சிகள், காங்கிரஸ், இந்திய மதச்சார்பின்மை முன்னணி கட்சி (ஐஎஸ்எஃப்) அடங்கிய சம்யுக்தா மோர்ச்சா கூட்டணிக்கு மொத்தமாகவே இரண்டு இடங்கள்தான் கிடைத்திருக்கின்றன. அவற்றில் காங்கிரஸுக்கு 1, ஒன்று ஐஎஸ்எஃபுக்கு. இடதுசாரிகளுக்கு ஒரு இடம்கூட கிடைக்கவில்லை. ஜக்னிபூர், ஷம்ஷேர்கஞ்ச் தொகுதிகளின் வேட்பாளர்கள், கரோனாவுக்குப் பலியாகிவிட்டதால், அந்த இரு தொகுதிகளுக்கான தேர்தல் ஒத்திவைக்கப்பட்டிருக்கிறது.

பலனளிக்காத பாஜக வியூகங்கள்

x