கட்டிப்புரண்டு கரைசேர்ந்த காங்கிரஸ்!- வெற்றி விகிதம் உயர்ந்தது எப்படி?


என்.சுவாமிநாதன்
swaminathan.n@kamadenu.in

அண்மைக் காலமாக காங்கிரஸ் மீது அதன் கூட்டணிக் கட்சிகளுக்கு ஒரு விமர்சனம் இருக்கிறது. அதிக எண்ணிக்கையில் சீட் வாங்கிவிட்டு சொற்ப தொகுதிகளில் மட்டுமே காங்கிரஸ் ஜெயித்துவருகிறது என்பதுதான் அந்த விமர்சனம். கடந்த ஆண்டு நடந்த பிஹார் சட்டப்பேரவைத் தேர்தலில் ‘மகா கட்பந்தன்’ கூட்டணியில் 70 இடங்களில் போட்டியிட்டு, 19 இடங்களில் மட்டும் வென்றது காங்கிரஸ். அந்தத் தேர்தலில் காங்கிரஸுக்கு 48 இடங்களை மட்டுமே தருவதாக ராஷ்ட்ரிய ஜனதா தளத் தலைவர் தேஜஸ்வி யாதவ் சொல்லிப்பார்த்தார். ஆனால், காங்கிரஸ் இறங்கிவரவில்லை. விளைவு, அந்தத் தேர்தலில் காங்கிரஸுக்குக் கிடைத்த தோல்விகளால், தேஜஸ்வி முதல்வராகும் கனவே தகர்ந்துபோனது!

பிஹார் தேர்தல் முடிவு வெளியானவுடன், தமிழ்நாட்டிலும் திமுக கூட்டணியில் காங்கிரஸ் கட்சிக்குக் குறைவான தொகுதிகளையே ஒதுக்க வேண்டும் என்று குரல்கள் எழுந்தன. எதிர்பார்த்ததுபோலவே இந்த முறை பலத்த இழுபறிக்குப் பின்னரே காங்கிரஸுக்கு 25 சீட்டுகள் ஒதுக்கப்பட்டன. ஆனால், இந்த முறை காங்கிரஸ் ஏமாற்றம் தரவில்லை. 18 இடங்களில் வென்று விமர்சனங்களுக்குத் தற்காலிக முற்றுப்புள்ளி வைத்திருக்கிறது.

பழைய கணக்குகள்

x