சாதித்துக்காட்டிய சமூக வலைதளங்கள்- தேர்தல் முடிவுகளைத் தீர்மானிக்கும் புதிய சக்தி


க.விக்னேஷ்வரன்
vigneshwritez@gmail.com

இந்தியா சுதந்திரம் பெற்ற பிறகு, தமிழகத்தில் 15 சட்டப்பேரவைத் தேர்தல்களைக் கடந்து, தற்போது 16-வது தேர்தல் திருவிழா நிறைவுபெற்றிருக்கிறது. இத்தனைத் தேர்தல்களுக்குப் பின்னால் 69 வருட காலப் பரிணாம மாறுபாட்டின் வரலாறு பொதிந்துள்ளது. மேடைப் பேச்சுகள், தெருமுனைப் பொதுக்கூட்டங்கள், துண்டுப் பிரசுரங்கள் விநியோகம் என்று இருந்த தேர்தல் பிரச்சாரப் போக்கு அறிவியல் வளர்ச்சியுடன் தன்னையும் இணைத்தே வளர்த்துக்கொண்டது. சினிமா, வானொலி, தொலைக்காட்சி விளம்பரங்களில் உலா வந்த பிரச்சார உத்திகள் இன்று சமூக வலைதளங்களில் மையம் கொண்டிருக்கின்றன.

மொழிப்போர் காலகட்டத்தில் உணர்வு பொங்கப் பொதுக்கூட்டத்தைத் தேடித் தேடிச் சென்று அமர்ந்த இளைஞர்கள் கூட்டம் போல், தற்போதைய இளைஞர்களின் மனப்போக்கு இல்லை. அவர்களின் கைகளில் தவழும் ஸ்மார்ட்போன்தான் அவர்கள் அரசியல் பேசும் ஆயுதமாக இருக்கின்றன . இன்றைக்குத் தனி மனிதர்கள்கூட தங்களுடைய அரசியல் - சமூகக் கருத்துகளை ஒரு ட்வீட் மூலமாகவோ அல்லது மீம்ஸ் மூலமாகவோ சில மணி நேரங்களில் தமிழகம் முழுவதும் கொண்டு செல்ல முடியும். தனி மனிதர்களுக்கே இவ்வளவு காத்திரமாக அரசியல் களமாடக்கூடிய வசதியைச் செய்து கொடுத்திருக்கும் இணையத்தை அரசியல் கட்சிகள் இந்தத் தேர்தலில் எவ்வாறு பயன்படுத்தின? பார்ப்போம்.

கையாண்ட உத்திகள்

x