தினகரனும் கமல்ஹாசனும் அவுட்!- சீமான் மட்டும் வாக்குகளைக் குவித்தது எப்படி?


கே.கே.மகேஷ்
magesh.kk@kamadenu.in

தமிழக சட்டப்பேரவைத் தேர்தல் முடிவுகள் இரண்டு விஷயங்களை அழுத்தமாக அடிக்கோடிட்டுக் காட்டி யிருக்கிறது. ஒன்று டெல்லியின் சொல்படி ஆள்பவர்களைவிட, உள்ளூரிலேயே முடிவெடுப்பவர்களைத்தான் தமிழ் மக்கள் விரும்புகிறார்கள் என்பது. இரண்டு, இரு திராவிடக் கட்சிகள் மீதும் அதிருப்தி கொண்டோர் ஒரு குறிப்பிட்ட சதவீதம் இருக்கிறார்கள், அவர்களில் பெரும்பாலானோர் சீமானை ஆதரித்திருக்கிறார்கள் என்பது.

டி.டி.வி.தினகரன்

இந்தத் தேர்தலில் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும் கட்சி என்று எதிர்பார்க்கப்பட்ட அமமுக பெருத்த ஏமாற்றத்தைத் தந்திருக்கிறது. 2016 இடைத்தேர்தலில் ஜெயலலிதா வென்ற அதே ஆர்.கே.நகர் தொகுதியில் களமிறங்கி, திமுக உள்ளிட்ட 11 கட்சி கூட்டணியை வீழ்த்தி பிரம்மாண்ட வெற்றியைப் பெற்றவர் டி.டி.வி.தினகரன். அடுத்த முதல்வர், அதிமுகவின் பொதுச் செயலாளர் என்று தன்னைத் தானே சொல்லிக்கொண்டவர் இப்போது எம்எல்ஏ ஆகக்கூட முடியாமல் சரிவைச் சந்தித்திருக்கிறார். சசிகலா சிறையில் இருந்து வந்ததும் மொத்த அதிமுகவும் அவர் காலடியில் போய் விழுந்துவிடும் என்றெல்லாம் எதிர்பார்த்தவர்களுக்கு பேரிடி இந்தத் தேர்தல் முடிவு.

x